நேற்று முதல் அரைசதம், இன்று 49 பந்தில் சதம்! சிக்ஸர் மழையில் கதிகலங்க வைத்த வீரர்
நெதர்லாந்து அணி வீரர் மைக்கேல் லெவிட் இரண்டாவது டி20 போட்டியிலேயே சதம் விளாசி மிரட்டினார்.
மைக்கேல் லெவிட் வாணவேடிக்கை
நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கிர்ட்டிபூரில் நடந்து வருகிறது. நெதர்லாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
தொடக்க வீரர் மேக்ஸ் ஓ டௌட் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சைபிராண்ட் ஏங்கல்பிரட் களமிறங்கினார். அவரும் மைக்கேல் லெவிட்டும் நமீபியா அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
குறிப்பாக மைக்கேல் லெவிட் சிக்ஸர் மழை பொழிந்தார். நேற்றைய தினம் தனது முதல் டி20 போட்டியில் அரைசதம் விளாசிய அவர், இன்று 49 பந்துகளில் சதம் அடித்து மிரள வைத்தார்.
ஏங்கல்பிரட் முதல் அரைசதம்
மறுமுனையில் ஏங்கல்பிரட் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ச்சியாக சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய மைக்கேல், 62 பந்துகளில் 135 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 10 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும்.
ஏங்கல்பிரட் 40 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் நெதர்லாந்து அணி 247 ஓட்டங்கள் குவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |