பயிற்சியாளர் குழுவை வலுப்படுத்த புதிய நபர் நியமனம்: பாகிஸ்தான் வாரியத்தின் திட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக மைக்கேல் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
மைக்கேல் ஸ்மித்
தென் ஆப்பிரிக்க முதல் தர கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஸ்மித் (Michael Smith) பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
46 வயதாகும் மைக்கேல் ஸ்மித் டெஸ்ட் மற்றும் பிற குறைந்த ஓவர் போட்டிகள் அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
ஆகஸ்ட் 19ஆம் திகதி தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மைக்கேல் ஸ்மித் தனது பணியைத் தொடங்க உள்ளார்.
திட்டங்களின் ஒரு பகுதி
லெவல் 4 தகுதிபெற்ற பயிற்சியாளரான இவர், இதற்கு முன்பு HBL பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் கிரிக்கெட் டாஸ்மேனியா அணிகளுக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "நெருக்கடியான சர்வதேசப் போட்டி அட்டவணைக்கு முன்னதாக, தேசிய அணியின் பயிற்சி ஊழியர்களை வலுப்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நியமனம் அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |