இந்தியாவின் தோல்வியை மழை காப்பாற்ற நினைக்குது! இங்கிலாந்துமுன்னாள் வீரர் கிண்டல்: டிராவான முதல் டெஸ்ட்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மழையால் கைவிடப்பட்டு டிராவானது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, டிரண்ட் பிரிட்ஜில் கடந்த 4-ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 278 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, இதைத் தொடர்ந்து 95 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸி ஜோ ரூட்டின் அபார சதத்தால் 303 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதன் பின், 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
Looks like Rain may be saving Indian here … ? #ENGvIND
— Michael Vaughan (@MichaelVaughan) August 8, 2021
இந்த போட்டியில் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் ஐந்தாம் நாளான இன்று தொடர்ந்து மழை பெய்து வந்ததால், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கபட்ட்டது.
இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டி டிராவானது.
இதற்கிடையில், மழை பெய்து கொண்டிருந்த போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல், மழை இந்தியாவை காப்பாற்ற நினைக்கிறது என்று கிண்டலாக டுவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.