தோனியின் கடைசிப்போட்டியா என தெரியாது..RCB வீரர்கள் செய்தது அநாகரீகம் - முன்னாள் வீரர் விமர்சனம்
எம்.எஸ்.தோனியை காத்திருக்க வைத்து பெங்களூரு வீரர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டனர் என மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
RCB வீரர்கள் கொண்டாட்டத்தில்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த பின்னர், RCB வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
MS Dhoni waited to shake hand with RCB players.
— Kumar Sourav (@AdamDhoni1) May 19, 2024
However, he shook hands with the support staff#cricket #MSDhoni #IPL2024 pic.twitter.com/BnJiyt5J4X
ஆனால், எதிரணி வீரர்கள் சம்பிரதாயமாக கைகொடுக்க வரும் சமயத்தில் அவர்கள் அவ்வாறு செய்தது விமர்சனங்களை பெற்றது. இதுதொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தோனி அவர்களுக்கு கைகொடுக்காமல் சென்றுவிட்டதாக கருத்துக்கள் எழுந்தன.
வாகன் விமர்சனம்
இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் (Michael Vaughan), பெங்களூரு அணி வீரர்களை செயலை கண்டித்துள்ளார்.
அவர், ''ஒரு குழு வீரர்கள் விழிப்புணர்வைக் காட்ட எப்போதாவது இருந்திருந்தால், அது எம்.எஸ்.தோனியின் கடைசி ஆட்டமாக இருந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், ஒரு ஜாம்பவானான தோனி அங்கே இருக்கும்போது, அந்த வீரர்கள் காத்திருப்பு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு கைகுலுக்க சென்றிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனால் தோனி அமைதியாக CSK உடைமாற்று அறைக்கு சென்றார். அவரது கடைசி ஐபிஎல் இது என்பதை பின்னர் உணர்ந்தால், அவர்களின் அநாகரீகமான நடத்தைக்கு அவர்கள் வருத்தப்படுவார்கள். நீங்கள் கைகுலுக்கி, பிறகு உங்கள் கொண்டாட்டத்தை தொடருங்கள். முதலில் சென்று கைகுலுக்க அவர்களுக்கு கண்ணியம் இல்லை'' என தெரிவித்துள்ளார் .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |