இங்கிலாந்தை இந்த இந்திய வீரர் அடித்து நொறுக்கப்போகிறார்! எச்சரிக்கும் மைக்கல் வாகன்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேனில் ஒருவர் சிறப்பாக விளையாடுவார் என்று மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள இங்கிலாந்திற்கு சென்ற இந்திய அணி, அங்கே தங்கி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்க்டையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ஆம் திகதி நடைபெற்றது. இந்த போட்டி டிராவானதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஆன விராட் கோஹ்லி நீண்ட நாட்களாக சதமடிக்கவில்லை.
பல போட்டிகளில் அரை சதம் கடந்தும், அதைச் சதமாக மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். இப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி, லார்ட்டிஸில் நடைபெறுகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட வந்துவிட்டால் வீரர்களுக்குப் புத்துணர்ச்சி கிடைத்துவிடும். பல சிறந்த வீரர்கள், சிறந்த மைதானங்களில்தான் தங்களது திறமையை நிரூபித்திருக்கிறார்கள்.
எனவே, கோஹ்லி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி சதமடிப்பார் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
மைக்கல் வாகனின் இந்த கணிப்பு இங்கிலாந்து அணிக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.