31 வயதில் ஓய்வு முடிவு என்பது சோகம்! முன்னாள் வீரர் வேதனை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது சோகமான முடிவு என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் பென் ஸ்டோக்ஸ். அந்தப் போட்டியில் இறுதிவரை களத்தில் நின்ற அவர், 98 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த நிலையில் தான் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
skysports
இதுதொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்,
'நான்கு ஆண்டுகள் பெரும் பங்களிப்பை வீரர்கள் கொடுத்ததால் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றது உண்மையாக இருந்தாலும், இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அவர்களை தாண்டிய கதாநாயகனாக திகழ்ந்தார். ஆனால் அவர் 31 வயதில் ஓய்வு பெறுவது வருத்தமாக இருக்கிறது. எனினும் அவர் ஒரு ஜாம்பவான்' என தெரிவித்துள்ளார்.
England won the WC because for 4 years they all contributed hugely to the team ethos .. But let’s be honest it was @benstokes38 heroics that got them over the line in the final .. Sad at 31 to be retiring but what a legend .. #Stokes
— Michael Vaughan (@MichaelVaughan) July 19, 2022
File