இந்திய அணியின் வெற்றிக்கு... கோஹ்லி-ரோகித் ரசிகர்களிடையே சண்டையை மூட்டி விடும் வாகன்: என்ன சொல்லியிருக்கார் பாருங்க
இங்கிலாந்து அணிக்கெதிரான் நான்காவது டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் வீரர்கள் சிறப்பாக விளையாடியதால், அதை குறிப்பிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் டுவிட் போட்டுள்ளார்.
இந்திய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் குறிப்பாக ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி, இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
Great captaincy from Virat ... !! Allowing @ImRo45 to get involved & clearly his tactics work ... #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 18, 2021
நான்கு ஓவர் வீசிய அவர் 16 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அவர் மட்டுமின்றி சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 57 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி கட்ட சில ஓவர்களில் கோஹ்லி காயம் காரணமாக வெளியேறியதால், கட்டத்தில் துணை கேப்டன் ஆன ரோகித் சர்மா கேப்டன் ஆக பொறுப்பேற்றார், அவர் வந்த பின்னரே ஷாகூல் தாகூர் இரண்டு விக்கெட்டுகளை(பென் ஸ்டோக்ஸ், இயான் மோர்கன்) வீழ்த்தினார்.இது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Just a thought ... @surya_14kumar Mumbai Indian ... @hardikpandya7 Mumbai Indian ... @ImRo45 captaincy Mumbai Indian !!!! @mipaltan #JustSaying #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 18, 2021
இதனால் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இவர்கள் மூன்று பேரின் பெயரையும் குறிப்பிட்டு, மும்பை இந்தியன்ஸ் ஹாஷ்டேக்கை பயன்படுத்தினார்.
இதைக் கண்ட கோஹ்லி மற்றும் ரோகித்சர்மா ரசிகர்கள் வழக்கம் போல் கோஹ்லி தான் பெரியவர், ரோகித் தான் பெரியவர் என்று வாகனின் கமெண்ட்டிற்கு கீழ் சண்டை போட ஆரம்பித்துவிட்டனர்.
Just a thought ... @surya_14kumar Mumbai Indian ... @hardikpandya7 Mumbai Indian ... @ImRo45 captaincy Mumbai Indian !!!! @mipaltan #JustSaying #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 18, 2021
மேலும் ஒரு சிலர் இங்கிலாந்து அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களா? என்று அவருடைய டுவிட்டையே கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டுள்ளனர்.