இந்திய அணியின் வெற்றி குறித்த பதிவுக்கு வயிற்றெரிச்சலை காட்டும் வகையில் பதில் அளித்து வம்பிழுத்த மைக்கேல் வான்! இப்படி சொல்லலாமா?
இந்திய அணியின் சாதனை ஓவல் வெற்றி குறித்து ஜாம்பவான் கங்குலி வெளியிட்ட பதிவை பார்த்து வயிற்றெரிச்சலை காட்டும் வகையில் மைக்கேல் வான் பதிலளித்துள்ளார்.
ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துல்லியத் தாக்குதலில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.
இந்தியாவின் சாதனை வெற்றி குறித்து சவுரவ் கங்குலி டுவிட்டரில், கிரேட் ஷோ, திறமைதான் வித்தியாசம், ஆனால் மிகப்பெரிய வித்தியாசம் பிரஷரை உறிஞ்சிக் கொள்ளும் திறமையாகும்.
இந்திய அணி மற்ற அணிகளைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதல் உயரத்தில் உள்ளது என்று பதிவிட்டிருந்தார்,
இதற்குப் பதிவிட்டிருந்த மைக்கேல் வான் வயிற்றெரிச்சலுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அல்ல என்று வம்பிழுத்துள்ளார்.
இங்கிலாந்து இனி இந்த டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பில்லை, மான்செஸ்டரில் வென்று தொடரை சமன் வேண்டுமானால் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.