ஜனாதிபதி வேட்பாளராக அவரென்றால் டொனால்டு ட்ரம்ப் தோற்கடிக்கப்படுவது உறுதி: குவியும் ஆதரவு
தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், டொனால்டு ட்ரம்புக்கு எதிராக தற்போது ஒரேயொரு பெயர் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
வலிமையான ஒரேயொரு நபர்
டொனால்டு ட்ரம்பை 2020 தேர்தலில் ஜோ பைடன் தோற்கடித்தது போன்று, 2024ல் தோற்கடிக்க வலிமையான ஒரேயொரு நபர் அவர் என்றும், அவர் தேர்தல் களம் கண்டால் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தோற்கடிக்கப்படுவது உறுதி என்றே கூறுகின்றனர்.
அவர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா. ஆனால், ஜனாதிபதி ஜோ பைடன் தமக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை முன்மொழிந்துள்ளார்.
இருப்பினும், மிச்செல் ஒபாமாவுக்கான ஆதரவு குவிந்து வருகிறது. மட்டுமின்றி, 2009 முதல் 2017 வரையான காலகட்டத்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தவர் மிச்செல் ஒபாமா.
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், தாம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, 60 வயதாகும் மிச்செல் ஒபாமாவை ஆதரித்து பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வடக்கு டகோட்டாவின் செனட்டர் கெவின் க்ரேமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், ரகசியம் எதையும் தாம் வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால், மிச்செல் ஒபாமா தற்போது களமிறங்கினால், அது கட்சிக்கும் நாட்டுக்கும் வலு சேர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் அறியப்படும் பெயர்
பெண் ஒருவர் பதிவிடுகையில், அவர்கள் கமலா ஹாரிஸ் அல்லது மிச்செல் ஒபாமாவை தெரிவு செய்யவில்லை என்றால், தாம் இந்தமுறை வாக்களிப்பதாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொருவர் பதிவிடுகையில், மிச்செல் ஒபாமா, உங்கள் நாட்டின் தற்போதைய தேவை நீங்கள், களமிறங்குங்கள் வெற்றி நமதே என பதிவிட்டுள்ளார். மிச்செல் ஒபாமாவால் மட்டுமே ட்ரம்பை தோற்கடிக்க முடியும் என சமூக ஊடக பக்கங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.
வாக்காளர்களை ஈர்க்கவும், கட்சியை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் அறியப்படும் பெயர் அவருடையது என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஜோ பைடன் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டு நமது கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் வருவதற்கு எனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |