ஒபாமாவுடன் விவாகரத்தா? மனம் திறந்த மிச்செல் ஒபாமா
ஒபாமாவுடன் விவாகரத்து என பரவிய தகவலுக்கு அவரது மனைவி மிச்செல் ஒபாமா விளக்கமளித்துள்ளார்.
தனியாக வந்த ஒபாமா
2009 முதல் 2017 வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர் பாரக் ஒபாமா.
ஒபாமாவிற்கு கடந்த 1993 ஆம் ஆண்டு மிச்செல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு.
இந்நிலையில், முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கு நிகழ்வு ட்ரம்பின் 2 ஆவது பதவியேற்பு நிகழ்வு என உயர் மட்ட அரசியல் நிகழ்வுகளில், ஒபாமா தனது மனைவி மிஷெல் இல்லாமல் தனியாக பங்கேற்றார்.
இதனால், இருவரும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியானது.
மிச்செல் ஒபாமா விளக்கம்
இந்நிலையில், நடிகை சோபியா புஷ்ஷுடனான Work in Progress என்ற பாட்காஸ்ட் நேர்காணலில் பங்குபெற்ற மிச்செல் ஒபாமா இது குறித்து விளக்கியுள்ளார்.
இதில் பேசிய அவர், "என்னுடைய நாட்களை நானே தீர்மானிக்கும் வாய்ப்பு எனக்கு இப்போது உள்ளது. இதுபோன்ற முடிவுகளை நான் பல வருடங்களுக்கு முன்பே எடுத்திருக்க முடியும்.
எனது குழந்தைகளுக்கு அவர்களுக்கான வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டி இருந்ததால், அப்போது இந்த முடிவுகளை எடுக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என பிறர் விரும்புவதை தேர்வு செய்வதற்குப் பதிலாக, எனக்கு எது சிறந்ததோ அதை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.
ஒரு பெண் சுதந்திரமாக தேர்வு செய்து செயல்படுவதை ஏற்க முடியாதவர்கள், அதை எனக்கும் எனது கணவருக்கமான விவகாரத்தாக கருதுகிறார்கள்." எனக் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |