அறிமுகமானது Micromax IN Note 2 ஸ்மார்ட்போன்! விலை எவ்வளவு தெரியுமா?
பல்வேறு அட்டகாசமான அம்சங்களுடன் உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Micromax, அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக Micromax IN Note 2 மொடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
Micromax IN Note 2 மீடியாடெக் ப்ராசஸர் மற்றும் அமோஎல்இடி டிஸ்ப்ளேவுடன் புதிய மற்றும் அதிக பிரீமியம் தோற்றத்துடன் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் பட்ஜெட்-மிட் ரேஞ்ச் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் 'IN' சீரீஸ் ஸ்மார்ட்போன் வருகிற ஜனவரி 30 முதல் விற்பனைக்கு வரும். இந்த விற்பனையில் நிறுவனத்தின் பிரத்யேக அறிமுக சலுகையும் அணுக கிடைக்கும்.
Micromax IN Note 2 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஆனது ரூ.13,490 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, இது வருகிற ஜனவரி 30 முதல் விற்பனைக்கு வரும். அறிமுக சலுகையாக, இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும் மற்றும் முன்கூட்டியே வாங்குபவர்கள் இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,490 க்கு பெறலாம்; ஸ்டாக் இருக்கும் வரை இந்த சலுகை இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 30-ஆம் திகதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் மற்றும் இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சொந்த, அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனை செய்யப்படும்.
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.
இது 6.43-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x2,400 பிக்சல்கள்) அமோஎல்இடி டிஸ்ப்ளேவை, 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 550 நைட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் கொண்டுள்ளது.
இதன் டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி95 ப்ராசஸர், 4ஜிபி ரேம் உடன் வரும் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஆனது குவாட் ரியர் கேமரா அமைப்பையும் பேக் செய்கிறது.
அதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன, செல்ஃபீக்கள் மற்றும் வீடியோ சாட்களுக்காக இதில் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.
Micromax IN Note 2 ஆனது 64GB அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256GB வரை ஸ்டோரேஜை நீட்டிக்க உதவும் பிரத்யேக ஸ்லாட்டையும் ஆதரிக்கிறது.
கனெக்டிவிட்டிகளை பொறுத்தவரை, இது 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ ஏஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. மேலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இதில் 5,000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது, இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.
இந்த போனுடன் வழங்கப்படும் சார்ஜரைப் பயன்படுத்தும் போது இதன் பேட்டரி வெறும் 25 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.