பிரபல நடிகையின் கணவர்... ரூ 3 லட்சத்தில் உருவாக்கிய நிறுவனம்: இன்று சொத்து மதிப்பு ரூ 1300 கோடி
தந்தையிடம் இருந்து ரூ 3 லட்சம் கடனாக வாங்கி தமது மூன்று நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ 1358 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக
கடந்த 2000 ஆண்டில் ராகுல் சர்மா தமது நண்பர்கள் மூவருடன் இணைந்து உருவாக்கிய நிறுவனம் Micromax. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு Micromax நிறுவனத்தின் ஆண்டு வருவாய் என்பது ரூ 22,368 கோடி என தெரிய வந்தது.
Micromax நிறுவனம் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் மலிவான தொழில்நுட்ப தயாரிப்புகளில் கவனம் செலுத்தியுள்ளது. மட்டுமின்றி, ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு மாதம் வரையில் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போனை Micromax முதலில் உருவாக்கியது.
அதன் பின்னர் இரண்டு சிம்கள் கொண்ட அலைபேசிகளில் கவனம் செலுத்தியது. 2018ல் இந்தியாவில் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய RV 400 என்ற மின்சார பைக் ஒன்றை ராகுல் சர்மா அறிமுகம் செய்தார்.
பொறியியல் பட்டதாரியான ராகுல் கனடாவில் உள்ள சஸ்காட்சுவான் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். 2010ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகை விருது உட்பட பல்வேறு விருதுகளையும் கைப்பற்றியுள்ளார்.
சொத்து மதிப்பு ரூ 1300 கோடி
2016 ஜனவரி மாதம் கேரளத்தை சேர்ந்த நடிகையான அசின் தோட்டும்கல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2012ல் இந்தி திரைப்பட நட்சத்திரமான அக்ஷய் குமார் தமது நெருங்கிய நண்பரான ராகுலுக்கு அசினை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 2017ல் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ராகுல் சர்மாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ 1300 கோடி என தெரிய வந்துள்ளது.
இவரிடம் Mercedes GL450, BMW X6, Bentley Supersport, Rolls Royce Ghost Series 2 ஆகிய கார்கள் உள்ளன. அசின் உடனான நிச்சயதார்த்தத்திற்காக ரூ 6 கோடி மதிப்பிலான மோதிரம் ஒன்றை ராகுல் பரிசளித்துள்ளார்.
டெல்லியில் பிறந்த ராகுல் சர்மா Micromax நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மேன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விளம்பரதாரராகவும் இருந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |