ஒருநாள் சம்பளம் மட்டுமே 65 லட்சம்: யார் இந்த CEO சஞ்சய் மெஹ்ரோத்ரா
இந்தியாவில் சஞ்சய் மெஹ்ரோத்ராவின் மைக்ரோன் நிறுவனம் ரூ.6760 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் சிப்களை தயாரிக்க ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் சிப் ஆலை
இந்திய அரசாங்கத்துடன் இணைந்து மைக்ரோன் நிறுவனம் மொத்தம் 22,540 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் சிப் ஆலையை தொடங்க உள்ளனர். அமெரிக்க நிறுவனமான மைக்ரோன் மிக விரைவில் தங்களின் முதல் செமிகண்டக்டர் ஆலையை இந்தியாவில் நிறுவ உள்ளதாக சஞ்சய் மெஹ்ரோத்ரா சமீபத்தில் உறுதி அளித்திருந்தார்.
@dna
குஜராத் மாநிலத்தில் கட்டமைக்க இருக்கும் இந்த ஆலை ஊடாக புதிதாக 5,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றே கூறுகின்றனர். மைக்ரோன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் CEO ஆகியோர் சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உறுதி அளித்துள்ளனர்.
மைக்ரோன் நிறுவனத்துடன் இணைந்து 22,540 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலை ஒன்றை குஜராத்தில் தொடங்க உள்ளதை பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
ஊதியம் 28,840,809 டொலர்
இதில் மைக்ரோன் நிறுவனம் சுமார் 6,760 கோடி மட்டுமே முதலீடு செய்ய உள்ளது. எஞ்சிய தொகையை இந்திய அரசாங்கம் முதலீடு செய்யும். ஆனால், இந்த நிறுவனத்தின் மொத்த உரிமையும் மைக்ரோன் வசம் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
2024 டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப் வெளியாகும் என்றே நம்பப்படுகிறது. கான்பூரில் பிறந்த சஞ்சய் மெஹ்ரோத்ரா பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.
2017 முதல் மைக்ரோன் நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து வருகிறார் சஞ்சய் மெஹ்ரோத்ரா. 2022ல் வெளியான அறிக்கையின் அடிப்படையில், சஞ்சய் மெஹ்ரோத்ராவின் மொத்த ஊதியம் 28,840,809 டொலர் என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |