இந்தியாவில் பல நகரங்களில் நிலங்களை வாங்கிக் குவிக்கும் மைக்ரோசாப்ட்: வெளிவரும் புதிய தகவல்
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவின் புனே நகரில் ரூ 560 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்டு மாதம் பதிவு
உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட் புனே நகரில் 16.4 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. பத்திரப்பதிவுக்காக ரூ 31.18 கோடி செலவிட்டுள்ளது. அத்துடன் பதிவு செய்யும் கட்டணமாக ரூ 30,000 செலுத்தியுள்ளது.
புனே நகரில் அமைந்துள்ள Hinjewadi பகுதியில் 16.4 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள மைக்ரோசாப்ட், ஆகஸ்டு மாதம் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் மைக்ரோசார்ப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐதராபாத் நகரில் 48 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது. அதன் மதிப்பு ரூ 267 கோடி என தெரிவிக்கப்பட்டது. கடந்த 2022ல் Pimpri-Chinchwad பகுதியில் ரூ 328 கோடி மதிப்பில் 25 ஏக்கர் நிலத்தை மைக்ரோசாப்ட் வாங்கியிருந்தது.
இந்தியாவில் தங்கள் நிறுவனத்தை விரிவு படுத்தும் நோக்கிலேயே மைக்ரோசாப்ட் நிலம் வாங்குவதாக கூறுகின்றனர். இந்தியாவில் புனே, மும்பை மற்றும் சென்னை நகரங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |