2025ம் நிதியாண்டில் ரூ.780 கோடி சம்பளம்: மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா சாதித்தது எப்படி?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான(CEO) சத்யா நாதெல்லா(Satya Nadella) 2025ம் நிதியாண்டில் மட்டும் $96.5 மில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.780 கோடிக்கு மேல் ஊதியம் பெற்றுள்ளார்.
இதன் மூலம் உலக அளவில் அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரியாக அவர் தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.
ஆண்டுக்கு ரூ.780 கோடி ஊதியம் பெற்று இருப்பது, அவர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 லட்சம் ஊதியமாக பெற்றுள்ளார் என்பதை குறிக்கிறது.

1 மணி நேரத்துக்கு ரூ.10 லட்சம் சம்பாதித்தது எப்படி?
சத்யா நாதெல்லா இந்த பிரம்மாண்ட ஊதியம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் பங்குதாரர்களின் நீண்டகால மதிப்புடன் இணைந்துள்ளது.
அதாவது, சத்யா நாதெல்லாவின் ஊதியத்தில் 90% மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகளாக வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்முறையின் மூலம் சத்யா நாதெல்லாவின் நிதி ஆதாரத்தை, நிறுவனத்தின் பங்குகள் வளர்ச்சியுடன் நேரடியாக சீரமைத்து உள்ளது.
நாதெல்லாவின் அடிப்படை ஊதியம் $2.5 மில்லியன்(ரூ 20 கோடி) ஆகும். பணியின் மீதமுள்ள ஊக்க தொகையானது(Incentives) செயல்திறனை பொறுத்து வழங்கப்படுகிறது.

ஊதிய உயர்வுக்கான முக்கிய காரணம்
சத்யா நாதெல்லாவின் இந்த ஊதிய உயர்வுக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகள் ஆகும்.
சத்யா நாதெல்லா தலைமை செயல் அதிகாரியாக செயல்படும் இந்த காலத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் சுமார் $3.4 டிரில்லியன் டொலாராக விரிவடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |