சம்பளத்தில் பெருந்தொகையை குறைத்துக் கொண்ட மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா... வெளியான பின்னணி
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா, தமது சம்பளத்தில் பெருந்தொகையை குறைத்துக்கொள்ள கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளத்தில் பெருந்தொகை
2024 நிதியாண்டில் சத்யா நாதெல்லாவின் சம்பளம் சுமார் 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பங்குகள் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.
அதாவது 2023ல் 39 மில்லியன் டொலராக இருந்தது தற்போது 71 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இருப்பினும், தமது சம்பளத்தில் பெருந்தொகையை குறைத்துக்கொள்ள அவர் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மேற்கோள் காட்டியே சத்யா நாதெல்லா தமது சம்பளம் தொடர்பில் கோரிக்கை வைத்துள்ளார். சமீபத்தில் பல இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் எதிர்கொண்டது.
கணக்குகளை குறிவைத்தது
மட்டுமின்றி, அமெரிக்க அதிகாரிகளின் மின்னஞ்சல் கணக்குகளை சீனா வேவு பார்த்ததாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனவரியில், ரஷ்ய உளவுத்துறை சில முக்கிய மைக்ரோசாப்ட் நிர்வாகிகளின் மின்னஞ்சல் கணக்குகளை குறிவைத்தது. 2024 நிதியாண்டில் 71.2 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ 600 கோடி) மதிப்பிலான பங்குகளை கைப்பற்றியுள்ளார்.
ஈக்விட்டி அல்லாத ஊக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் ரூ 44 கோடியும், அடிப்படை சம்பளமாக ரூ 21 கோடியும், இதர சலுகைகளாக சுமார் ரூ 15 லட்சமும் சத்யா நாதெல்லா கைப்பற்றியுள்ளார். ஆனால் அவருக்கான ஊக்கத்தொகையானது 10.7 மில்லியன் டொலரில் இருந்து 5.2 டொலராக சரிவடைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |