இஸ்ரேலுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிர்ச்சி வைத்தியம்: சேவை நிறுத்தம்
இஸ்ரேலிய இராணுவத்திற்கு வழங்கபப்ட்டு வந்த சில கிளவுட் சேவைகளுக்கான அணுகலை நிறுத்தியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கிளவுட் சேவை
இஸ்ரேல் இராணுவம் காஸாவில் பெருமளவிலான கண்காணிப்பை மேற்கொள்ள மைக்ரோசாப்ட்டின் இந்த சேவைகளைப் பயன்படுத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்குக்கரை மற்றும் காஸாவில் பாலஸ்தீன மக்களை தீவிரமாக கண்காணிக்கவும், அவர்களின் அலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு தரவுகள் சேகரிக்கவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Azure கிளவுட் சேவையை இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்தி வருவதை Guardian செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது.
இந்த நிலையில், மைக்ரோசாப்ட் ஊழியர்கள் பலர் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சிலர் தங்கள் வேலையை இழந்தனர்.
தற்போது மைக்ரோசாஃப்ட் தலைவர் Brad Smith ஊழியர்களுக்கு அனுப்பிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், Guardian செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் உண்மை என்றும், பொதுமக்களை கண்காணிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொழில்நுட்பத்தை இஸ்ரேலுக்கு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
துண்டிக்க வேண்டும்
மேலும், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளின் சைபர் பாதுகாப்பைப் பாதுகாக்க மைக்ரோசாப்ட் தொடர்ந்து செய்து வரும் முக்கியமான பணிகளை இது பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் கிளவுட் சேவையில் சேமிக்கப்பட்ட தரவுகள் மொத்தம் AWS எனப்படும் அமேசான் நிறுவனத்தின் சேவைகளுக்கு இஸ்ரேல் மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இஸ்ரேலுடனான தொடர்புகள் மொத்தவும் துண்டிக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்த மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
2021ல் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவிற்கும், தொடர்புடைய சர்ச்சைக்குரிய பிரிவின் அப்போதைய தளபதி யோசி சரியலுக்கும் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு இந்த திட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |