படிப்பை பாதியில் நிறுத்தியவருக்கு 450 கோடி சம்பளம்! 38 வயதில் 4,167 கோடிக்கு அதிபதி
OpenAIயின் முன்னாள் CEO சாம் ஆல்ட்மேனை 450 கோடி ஊதியத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.
OpenAI-யின் CEO
கடந்த சனிக்கிழமை செயற்கை நுண்ணறிவு தொழில்நுப்டத்தில் கோலோச்சும் OpenAI நிறுவனமானது, தனது CEO சாம் ஆல்ட்மேனை வெளியேற்றியது. இது வர்த்தக உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து சாம் ஆல்ட்மேனை மைக்ரோசாப்ட் நிறுவனம் AI ஆராய்ச்சி குழுவை வழிநடத்த பணியமர்த்தியுள்ளது. அவருக்கு 450 கோடி ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்யா நாதெல்லா கூறுகையில், 'OpenAI நிறுவனத்துடனான எங்கள் உறவு உறுதியாக இருக்கிறது. சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரேட் ப்ரோக்மேன் ஆகியோர் எங்கள் நிறுவனத்தில் இணைந்து AI ஆராய்ச்சி குழுவை வழிநடத்த உள்ளனர் என்ற செய்தியை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என தெரிவித்துள்ளார்.
AFP
சாம் ஆல்ட்மேன் OpenAIயில் இருந்து நீக்கப்பட்ட சில நாட்களிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பாரிய ஊதியத்திற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
யார் இந்த சாம் ஆல்ட்மேன்?
சாமுவெல் ஹாரிஸ் ஆல்ட்மேன் எனும் இயற்பெயர் கொண்ட சாம் ஆல்ட்மேன், அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்தவர்.
தற்போது 38 வயதாகும் இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஆனால் ஓர் ஆண்டு படிப்புடன் பட்டம் பெறாமலேயே சாம் 2005யில் பாதியிலேயே வெளியேறினார்.
எனினும் ஸ்டீவ் ஜாப்ஸை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு கணினி துறையில் கவனம் செலுத்தினார்.
Reuters
8 நாட்கள் மட்டும் CEO
தனது 19 வயதில் Loopt எனும் செயலியை நிறுவிய சாம், அதன் மூலம் 30 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டினார்.
ஆனால், Loopt போதிய பயனர்களை ஈர்க்கத் தவறியதால் 2012ஆம் ஆண்டில் Green Dot Corporation-யினால் 43.4 மில்லியன் டொலர்களுக்கு கையகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் Redditயின் CEO ஆக 8 நாட்கள் மட்டுமே சாம் ஆல்ட்மேன் பணியாற்றினார்.
AFP
4,167 கோடி சொத்து
அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டில் OpenAI தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நிதி அளிக்கும் பங்குதாரராக இருந்த சாம் பின்னாளில் CEO ஆனார்.
இந்த நிலையில் தான் OpenAI அவரை CEO பதவியில் இருந்து நீக்கியது. தற்போது சாம் ஆல்ட்மேனின் சொத்து மதிப்பு 4,167 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தக உலகமே பரபரப்பாக பேசும் ஆளாக சாம் ஆல்ட்மேன் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kevin Dietsch/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |