ரூ.25,700 கோடியை இந்தியாவில் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்.., 1 கோடி மக்களுக்கு நற்செய்தி
இந்தியாவில் 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 பில்லியன் டொலர் முதலீடு
அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் 3 பில்லியன் டொலர்களை (சுமார் ரூ.25,700 கோடி) முதலீடு செய்ய உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா இந்தியா வந்துள்ள நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) திறன் மற்றும் அதன் சொந்த Azure கிளவுட்-கம்ப்யூட்டிங் சேவைகள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது.
Advanta(I)ge India என்ற முன்னெடுப்பு மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 மில்லியன் மக்களுக்கு AI திறன்களைப் நிறுவனம் பயிற்றுவிக்கும் என்று சத்யா நாதெல்லா கூறியுள்ளார்.
முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சத்யா நாதெல்லா சந்தித்துள்ளார். இது குறித்து மோடி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "சத்ய நாதெல்லாவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லட்சியமிக்க விரிவாக்கம் மற்றும் முதலீட்டு திட்டங்கள் பற்றி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது சந்திப்பின்போது, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தது சிறப்பாக இருந்தது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |