பாலஸ்தீன மக்களைக் கொல்லும் மைக்ரோசாப்ட்... பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மறுத்த சத்யா நாதெல்லா
சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் பில்ட் நிகழ்வின் போது, தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் முக்கிய உரையை நிறுவனத்திலேயே பணிபுரியும் பொறியாளர்களில் ஒருவர் குறுக்கிட்டார்.
போர் குற்றங்கள்
ஜோ லோபஸ் என்ற அந்த ஊழியர், காஸாவில் இஸ்ரேலிய போர் நடவடிக்கைகளுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவி செய்வதாக கடுமையாகக் குற்றம் சாட்டி கத்தினார்.
லோபஸ், நான்கு ஆண்டுகளாக Azure Hardware Systems and Infrastructure (AHSI) க்குக் கீழே ஒரு firmware பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சத்யா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் எத்தனை பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நீங்கள் தோராயமாகக் கூற முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
Azure மென்பொருளால் இஸ்ரேலிய போர் குற்றங்கள் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை நீங்கள் விளக்கமளிக்க முடியுமா என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விழா அரங்கில் இருந்து அவரை வெளியேற்றினர். இருப்பினும் அடங்காத லோபஸ் நிறுவனத்திற்குள் பயன்படுத்தும் மின்னஞ்சலில் விளக்கம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
தாம் ஏன் அந்த விழாவில் குறுக்கிட்டோம் என்பதை குறிப்பிட்ட லோபஸ், பாலஸ்தீன மக்களின் இன அழிப்பை செயல்படுத்த மைக்ரோசாப்ட் இஸ்ரேலுக்கு உதவுவதாக பதிவு செய்துள்ளார்.
சிறப்பு அணுகலை வழங்கி
Azure மென்பொருளால் காஸா போரில் உயிர் இழப்புகள் ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என மைக்ரோசாப்ட் நிர்வாகம் வெளிப்படையாக தெரிவித்த நிலையிலேயே லோபஸ் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ள கருத்துகள் நம்பும் வகையில் இல்லை என்றும், குறிப்பாக மைக்ரோசாப்ட் மற்றும் பெயரிடப்படாத ஒரு வெளி நிறுவனம் இதை நடத்தியதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய தணிக்கையின் வெளிப்படைத்தன்மை குறித்து அவர் தமது சந்தேகத்தை பதிவு செய்திருந்தார்.
மட்டுமின்றி, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மைக்ரோசாப்ட் அதன் தொழில்நுட்ப சிறப்பு அணுகலை வழங்கியதாக ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும் வலுவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், பொது மக்களால் புறக்கணிக்கப்படும் நாள் வரும் என்றும் லோபஸ் எச்சரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |