மைக்ரோசாப்ட் பணி நீக்கம்: 6000+ ஊழியர்கள் வேலையிழப்பு! காரணம் என்ன?
மைக்ரோசாப்ட் நிறுவனம் கிட்டத்தட்ட 6000+ ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
மைக்ரோசாப்ட் பணி நீக்கம்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது பணியாளர்களில் சுமார் 3 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது 6,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியான இந்த தகவல், டெக் துறையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.
பின்னணி என்ன?
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதற்கு முன்பும் பெரிய அளவிலான பணி நீக்கங்களை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2024 ஜூன் மாதத்தில் சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் ஊழியர்களும், 2023 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் ஊழியர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான அறிக்கைகளின்படி, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி-மார்ச் 2025) மைக்ரோசாப்ட் நிறுவனம் கணிசமான லாபத்தை ஈட்டியுள்ளது.
இருந்தபோதிலும், நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்தவும், அதற்கான போட்டியைச் சமாளிக்கவும் இந்த பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
பழைய பணிகளை குறைத்து, புதிய தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கலாம்.
டெக் ஊழியர்கள் மத்தியில் கவலை
தொடர்ச்சியாக பெரிய டெக் நிறுவனங்கள் பணி நீக்கங்களை அறிவித்து வருவது, இத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பாதுகாப்பற்ற நிலையையும் உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |