தூக்கம் என்பது தேவையற்றது என நினைத்து இருந்தேன்! பில் கேட் அறிவுரை
மனித வாழ்வில் தூக்கம் என்பது தேவையற்றது மற்றும் சோம்பல் தனமானது என்று நினைத்து இருந்தேன் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
தூக்கம் தேவையற்றது
அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த 1995 முதல் 2017 ஆண்டுகள் வரையுள்ள காலகட்டத்தில் உலகின் முதன்மை பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
இப்போதும் கூட 134 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் நான்காவது பணக்காரர் என்ற இடத்தில் மதிப்புமிக்க மனிதராக உள்ளார்.
Getty Images
இந்நிலையில் சமீபத்தில் தூக்கம் தொடர்பாக தன்னுடைய 30 மற்றும் 40 வயதுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சக ஊழியர்களுடன் இவ்வாறு பேசிக் கொள்வோம் என பில் கேட்ஸ் குறிப்பிட்டு, ஒருவர் 6 மணி நேரம் தான் தூங்குவதாக கூறுவார், மற்றொரு நான் 5 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் என கூறுவார்கள்.
அந்த காலகட்டத்தில் தூக்கம் என்பதே சோம்பல் மற்றும் தேவையற்றது என்று நினைத்தேன், அதனால் குறைவான அளவு தூங்கவும் முயற்சி செய்து இருக்கிறேன் என பில் கேட்ஸ் நிகழ்வையும் அந்த உரையாடலையும் பகிர்ந்துள்ளார்.
YouTube/Corbis via Getty Images
தூக்கம் அவசியம் தேவை
ஆனால் பின்னாளில் தூக்கம் குறித்து என்னுடைய எண்ணங்களை மாற்றிக் கொண்டேன், ஆழ்ந்த உறக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது நாம் அனைவரும் அறிகிறோம்.
மேலும் இளம் தலைமுறையினருக்கு சரியான தூக்கம் அவசியம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |