நடுவானில் இயந்திரக் கோளாறு... கடலில் விமானத்தை இறக்கிய விமானி
விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தைக் கடலில் இறக்கினார் விமானி.
கடலில் விமானத்தை இறக்கிய விமானி
பிரான்சில் சுற்றுலாப்பயணிகள் சிலருடன் சிறிய ரக விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக விமானத்தை தரையிறக்கவேண்டிய நிலை ஏற்பட, Frejus என்ற நகரத்தின் அருகே கடலில் விமானத்தை இறக்கியுள்ளார் விமானி.
(Representative)(REUTERS)
விமானத்தில் பயணித்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் பயத்தில் உறைந்துபோயிருக்க, அவர்களை தீயணைப்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளார்கள். ஆனால், அந்த விமானம் தண்ணீரில் மூழ்கிவிட்டது.
அதிர்ஷ்டம்தான்
இப்படி விமானத்தைக் கடலில் இறக்கவேண்டுமானால், விமானிக்கு எக்கச்சக்க தொழில்நுட்ப அறிவும், கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும் என்கிறார்கள் தீயணைப்புக் குழுவினர்.
அந்தக் கடற்கரையில் ஏற்கனவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இருந்ததாலேயே, கடற்கரையைத் தவிர்த்து, கடலில் விமானத்தை இறக்கியுள்ளார் அந்த விமானி. ஆனால், அந்த சுற்றுலாப்பயணிகள்தான் பாவம். பயத்தில் நடுநடுங்கிப்போயிருந்தார்களாம் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |