Bigg Boss 8: இந்த வாரம் நடக்கப்போகும் மிட் வீக் எவிக்ஷன்: வெளியேறும் போட்டியாளர் யார்?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 9 வாரங்களைக் கடந்து 10வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் 9ஆவது வாரத்தில் டபுள் எவிக்ஷன் என அறிவித்தார் விஜய் சேதுபதி. அதன்படி அடுத்தடுத்து சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரை எலிமினேட் ஆனார்கள்.
முதலில் RJ ஆனந்தியை தான் எலிமினேட் செய்தார் விஜய் சேதுபதி. அவரை தொடர்ந்து சாச்சனா எலிமினேஷன் ஆனார்.
பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர்.
நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ஆட்கள் அதிகமாக இருப்பதால் இனி வார வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதில் திடீர் ட்விஸ்டாக இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வாரம் நாமினேஷனில் ஜாக்குலின், செளந்தர்யா, ரயான், அருண், விஜே விஷால், தர்ஷிகா, அன்ஷிதா, சத்யா, பவித்ரா ஆகிய 9 பேரில் இருந்து ஒருவர் தான் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற வாய்ப்புள்ளது.
அந்தவகையில், சத்யா, தர்ஷிகா ஆகிய இருவரில் இருந்து ஒருவர் தான் இந்த வரம் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |