பிரித்தானியாவில் 80 வயது பெண் மர்ம மரணம்! முதியவர் ஒருவர் கைது
பிரித்தானியாவில் பெண் ஒருவரின் காரணம் தெரியாத மரணத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரணம் தெரியாத மரணம்
செவ்வாய்க்கிழமை காலை Bath பகுதியில் உள்ள வீட்டில் வயதான பெண் ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இறப்புக்கான காரணம் தற்போது தெரியவில்லை என்றாலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு எண்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்ப நிலை விசாரணை
காலை 8:30 மணி அளவில், பென்னட் தெருவில் இருந்த மனிதரின் ஒருவரின் நலம் குறித்து Avon மற்றும் Somerset பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், Upper Lansdown Mews என்ற இடத்தில் உள்ள வீட்டிற்குச் சென்று, அவசர மருத்துவ உதவி தேவைப்படும் எண்பது வயதுடைய பெண்ணை கண்டுபிடித்தனர்.
சம்பவ இடத்திற்கு துணை மருத்துவக் குழுவினர் வந்த போதிலும், அந்த இடத்திலேயே அந்த பெண் துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து இறப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
We're investigating the unexplained death of a woman at a Bath address yesterday.
— Avon and Somerset Police (@ASPolice) June 19, 2024
An arrest has been made.
Anyone with footage of an older man with a rucksack in Upper Lansdown Mews / Bennett Street, at 8-9am on Tue 18 Jun is asked to call 101
More ⬇️ https://t.co/JcKPDF5onN pic.twitter.com/qCkK1rZsa0
உறவினர்களுக்கு தகவல்
பெண்ணின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு சிறப்பாகப் பயிற்சி பெற்ற காவல்துறை அதிகாரிகளின் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் குற்றச் சம்பவத்தை அல்லது குற்றவாளியை நேரில் பார்த்த யாராவது இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |