பிரித்தானியாவில் அதிக ஊதியம் வழங்கும் நகரம் எது? ஒரு வித்தியாசமான பார்வை
பிரித்தானியாவில் அதிக ஊதியம் வழங்கு நகரம் லண்டன் என்பதை பலரும் எளிதில் கணிக்கக்கூடும். உண்மையும் அதுதான்.
ஆனால், வரவும் செலவும் சரியானால், மாதக்கடைசியில் மீதமிருப்பது என்ன?
ஆக, ஒரு நகரம் வழங்கும் ஊதியம், அங்குள்ள விலைவாசி, செலவுபோக மீதமிருப்பது என்ன என்பது போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு, எந்த பிரித்தானிய நகரம் அதிக ஊதியம் வழங்கும் பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது என ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவுகள் ஆச்சரியப்படும் விதத்தில், அதிகம் பிரபலமாகாத ஒரு நகரத்தை சுட்டிக்காட்டியுள்ளன!
பிரித்தானியாவில் அதிக ஊதியம் வழங்கும் நகரம் எது?
உண்மையில், பிரித்தானியாவில் அதிக ஊதியம் வழங்கும் நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது லண்டன். லண்டனில் வழங்கப்படும் சராசரி ஊதியம் 58, 163 பவுண்டுகள்.
ஆனால், அங்கு வீடு விலை 516,710 பவுண்டுகள், மாத வீட்டு வாடகை 1,933 பவுண்டுகள். ஆண்டு கார் காப்பீடு பிரீமியம் 1,190 பவுண்டுகள்.
அதே நேரத்தில், இங்கிலாந்திலுள்ள Middlesborough நகரில் வழங்கப்படும் சராசரி ஊதியம் 36,649 பவுண்டுகள்தான்.
ஆனால், அங்கு வீடு விலை 139,855 பவுண்டுகள், மாத வாடகை 609 பவுண்டுகள்.
ஆக, வரவு செலவுக்கணக்குகளைப் பார்த்தால், Middlesborough நகரில் வழங்கப்படும் ஊதியம் லண்டனை ஒப்பிடும்போது மிகக்குறைவானாலும், அங்கு செலவும் குறைவு.
அவ்வகையில், பிரித்தானியாவில் அதிக ஊதியம் வழங்கும் நகரங்கள் பட்டியலில் 6.51 புள்ளிகள் பெற்று Middlesborough முதலிடத்தைப் பிடிக்க, லண்டனுக்கு 3.91 புள்ளிகள் மட்டுமே கிடைக்க, பட்டியலில் லண்டன் கீழே போய்விட்டது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |