புதிய கொரோனாவைரஸ் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்: பிரித்தானிய நிபுணர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் புதிய கொரோனாவைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளார்கள் நிபுணர்கள்.
பிரோலா வைரஸ்
கொரோனாவைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பல்வேறு மாறுபாடுகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், மீண்டும் ஒரு கொரோனாவைரஸ் மாறுபாடு உலகில் பரவத் துவங்கியுள்ளது. அது பிரித்தானியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு BA.2.86 அல்லது ‘Pirola’ என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் எந்த அளவுக்கு மோசமானது என்பது தெரியவில்லை. பிரச்சினை என்னவென்றால், இந்த பிரோலா வைரஸ் தனது புரத அமைப்பில் 30 மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.
ஆகவே, அது மிக வேகமாக பரவக்கூடும் என்பதுடன், அது ஏற்கனவே கொடுக்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தைக்கூட தாண்டி தொற்றை ஏற்படுத்திவிடக்கூடும் என்னும் விடயம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் மிதமானது என்று கூறப்பட்டது. ஆனால், அதுவும் ஏராளம் உயிர்களை பலிகொண்டுவிட்டது. ஆக, இந்த பிரோலா வைரஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து எதுவும் கூறுவதற்கில்லை.
நிபுணர்கள் எச்சரிக்கை
இந்நிலையில், பிரித்தானியாவில் புதிய கொரோனாவைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளார்கள் நிபுணர்கள்.
அறிகுறிகள்
இந்த பிரோலா வைரஸ் தொடர்பில் நான்கு முக்கிய அறிகுறிகளைக் கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் மருத்துவர்கள், அந்த அறிகுறிகள் காணப்பட்டால், உடனே மருத்துவப்பரிசோதனை செய்துகொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
அந்த அறிகுறிகள் என்னென்ன?
அதிக காய்ச்சல்
இருமல்
ஜலதோஷம்
மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு.
பொதுவாக, மாறுபாடுகள் அடைய அடைய, வைரஸ்கள் வலுவிழக்கும், அதாவது, உயிரைப் பறிக்கும் அவற்றின் திறன் குறையும். ஆனால், இந்த வைரஸ் எப்படிப்பட்டது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |