பிரித்தானியாவுக்குள் நுழையும் நிலையில் உடல் நசுங்கி பலியான பெண்: மீட்கப்பட்ட 34 பேர்கள்

Asylum Seeker Migrants
By Arbin Jul 28, 2024 04:13 PM GMT
Report

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் பொருட்டு பிரிட்டிஷ் கால்வாயை கடக்க முயன்ற சிறு படகு ஒன்றில் பெண் ஒருவர் உடல் நசுங்கி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறப்பு எண்ணிக்கை

குறித்த சம்பவத்தில் அவசர உதவிக் குழுக்களால் 34 பேர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரெஞ்சு கடலோர காவல்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடலில் இன்னும் பல படகுகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழையும் நிலையில் உடல் நசுங்கி பலியான பெண்: மீட்கப்பட்ட 34 பேர்கள் | Migrant Boat Calais One Found Dead

சமீப மாதங்களில் சிறு படகுகள் பிரிட்டிஷ் கால்வாயை கடக்க முயற்சிப்பது அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது. மட்டுமின்றி, சமீபத்திய வாரங்களில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.

ஜூலை 21 வரையான தரவுகளின் அடிப்படையில் ஒரு வார காலத்தில் மட்டும் 27 படகுகளில் மொத்தம் 1,500 பேர்கள் பிரிட்டிஷ் கால்வாயை கடந்துள்ளதாக பிரித்தானியா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஒவ்வொரு படகிலும் சராசரியாக 55 முதல் 56 பேர்கள் பயணித்துள்ளனர். இதே காலகட்டத்தில், 33 படகுகளில் 1,007 பேர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை மட்டும் 6 படகுகளில் 370 பேர்கள் பிரிட்டிஷ் கால்வாயை கடந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் பிரிட்டிஷ் கால்வாயை கடந்த மக்களின் எண்ணிக்கை 15,000 கடந்துள்ளதாக பிரித்தானியா தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

மயங்கிய நிலையில் பெண் ஒருவர்

இதனிடையே, பிரெஞ்சு கடலோர காவல்படை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், படகு ஒன்று சிக்கலில் இருப்பதைக் கண்டு, ​​​​அதிகாலை 5.30 மணியளவில் மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானியாவுக்குள் நுழையும் நிலையில் உடல் நசுங்கி பலியான பெண்: மீட்கப்பட்ட 34 பேர்கள் | Migrant Boat Calais One Found Dead

படகில் இருந்தவர்கள் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், கடலோர காவல்படையினர் படகினை நெருங்கியபோது மயங்கிய நிலையில் பெண் ஒருவரை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, குறித்த படகில் இருந்து 34 பேர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, சட்டவிரோத குடியேற்றத்தைக் கையாள்வதில் பிரித்தானியாவின் அணுகுமுறை மாறியுள்ளதாகவே கூறப்படுகிறது.

சர் கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கம் ருவாண்டா திட்டத்தை கைவிட்டதுடன், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மக்கள் பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வதை தடுக்க சுமார் 84 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US