புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து ஆறு பேர் பலியான விவகாரம்: நான்கு பேர் மீது கொலைக்குற்றச்சாட்டு
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சிறுபடகொன்றில் பயணிக்கும் முயற்சியின்போது படகு கவிழ்ந்து ஆறு பேர் பலியான சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
50க்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்த படகு
கடந்த சனிக்கிழமை அதிகாலை, சுமார் 5.00 மணியளவில், கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்த சிறுபடகொன்றில் ஒரு கூட்டம் புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்டுள்ளார்கள்.
Credit: Stuart Brock
புறப்பட்ட சிறிது நேரத்தில், வடக்கு பிரான்ஸ் கடற்கரை ஒன்றின் அருகிலேயே அந்த படகு கவிழ்ந்துள்ளது. தகவலறிந்து பிரான்ஸ் தரப்பிலிருந்து ஐந்து மீட்புப் படகுகள் ஒரு ஹெலிகொப்டர், பிரித்தானிய தரப்பிலிருந்து இரண்டு படகுகள் ஆகியவை சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், 50 பேரை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
ஆனால், ஆறு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததுடன், இரண்டு பேர் கிடைக்கவேயில்லை. அவர்கள் அனைவருமே ஆப்கன் நாட்டவர்கள்.
நான்கு பேர் கைது
அந்த படகு விபத்து தொடர்பாக, பிரான்ஸ், நான்கு பேரைக் கைது செய்துள்ளது. அவர்களில் இருவர் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர்கள், இருவருக்கும் 43 வயது. மற்ற இருவர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் 29 வயதுடையவர், மற்றொருவர் 17 வயதேயுடையவர்.
Credit: Stuart Brock
அந்த நான்கு பேர் மீதும் கொலைக்குற்றச்சாட்டு, குற்றவியல் அமைப்பு ஒன்றில் பங்கேற்பு மற்றும் காயமடையச் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |