எந்த தடையும் இல்லாமல் வெற்றிகரமாக இங்கிலாந்தை அடைந்த புலம்பெயர்ந்தோர் படகு
Migrant boat reaches UK unintercepted: புலம்பெயர்ந்தோர் படகொன்று எந்த தடையும் இல்லாமல் வெற்றிகரமாக இங்கிலாந்தை வந்தடைந்துள்ளது.
பொதுவாக, ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கும் சிறுபடகுகள், ஒன்றில் எல்லை பாதுகாப்பு படையிடம் சிக்கும், அல்லது, RNLI என்னும் தொண்டு நிறுவனத்தின் படகுகளின் கண்ணில் படும்.
எந்த தடையும் இல்லாமல்...
ஆனால், நேற்று, திங்கட்கிழமையன்று, சிறுபடகொன்று யார் கண்ணிலும் படாமல் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளது.

ஐந்து புலம்பெயர்ந்தோருடன் கென்டிலுள்ள Folkestone என்னும் இடத்திலுள்ள கடற்கரையை வந்தடைந்துள்ளது அந்தப் படகு.
உஷாரான அதிகாரிகள் உடனே அந்தப் படகிலிருந்த ஐந்து புலம்பெயர்ந்தோரையும் கைது செய்துள்ளார்கள்.
யார் கண்ணிலும் படாமல் புலம்பெயர்வோர் படகொன்று வெற்றிகரமாக ஆங்கிலக்கால்வாயைக் கடந்து இங்கிலாந்தை அடைந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.