110 புலம்பெயர்வோருடன் பிரித்தானியா நோக்கி புறப்பட்ட படகு: ஒருவர் பலி
One migrant dies and 72 rescued from small boat trying to reach UK: பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும்போது புலம்பெயர்வோர் படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட புலம்பெயர்வோர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
110 புலம்பெயர்வோருடன்...
வியாழக்கிழமை நள்ளிரவு, 110 புலம்பெயர்வோருடன் ரப்பர் படகொன்று பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டுள்ளது.

அப்போது, படகில் ஏதோ பிரச்சினை என்பதை அறிந்த பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர் அந்தப் படகை நெருங்கியுள்ளார்கள்.
அந்தப் படகிலிருந்த ஒருவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை தேவை என்பது தெரியவரவே, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக ஹெலிகொப்டர் ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹெலிகொப்டர் வருவதற்குள் அவர் உயிரிழந்துள்ளார்.
படகிலிருந்த மேலும் மூன்று பேர் காயமடைந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், உதவி கோரிய 72 புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு கரை திரும்பியதாகவும் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |