பிரித்தானியாவில் இந்தியரைக் கத்தியால் குத்திக் கொன்ற புலம்பெயர்ந்தோர்: சமீபத்திய தகவல்
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் ஒருவர் இந்தியரைக் கத்தியால் குத்திக் கொன்றதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியரைக் கத்தியால் குத்திக் கொன்ற புலம்பெயர்ந்தோர்
இங்கிலாந்தின் Derbyshireஇல், Danny என அழைக்கப்படும் குர்விந்தர் சிங் ஜோஹல் (37) என்பவர் வங்கி ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

அவர் வங்கியில் பணம் எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்கும்போது, வங்கிக்குள் நுழைந்த நூர் (Haybe Cabdiraxmaan Nur) என்னும் நபர் ஜோஹலைக் கத்தியால் குத்தியுள்ளார்.
நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட ஜோஹல் பரிதாபமாக பலியாகிவிட்டார்.
விடயம் என்னவென்றால், இந்த சம்பவம், மே மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. ஆனால், இப்போது அந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்றை பொலிசார் வெளியிட்டுள்ளார்கள்.
எதற்காக இப்போது அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
யார் அந்த புலம்பெயர்ந்தோர்?
இந்தியரான ஜோஹலைக் கொலை செய்த நூர் என்பவர் சோமாலியா நாட்டவர் ஆவார். 400 பவுண்டுகள் கொடுத்து, சிறுபடகு ஒன்றின் மூலம் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர் அவர்.

நூருக்கு 25 ஆண்டுகள் ஜாமீனில் வர இயலாதவகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரத்திலிருந்த நூர், மருத்துவர்கள், பொலிசார் மற்றும் உள்துறை அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என 500 பேரைக் கொலை செய்துவிட்டு தானும் தன் உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாக புலம்பெயர்ந்தோருக்கு உதவும் ஒரு அமைப்புக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்துக்குப் பின், அப்பாவியாக வங்கிக்குச் சென்றுகொண்டிருந்த ஜோஹலைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார் நூர்.
கொல்லப்பட்ட ஜோஹல், மருத்துவரும் இல்லை, பொலிசாரும் இல்லை, உள்துறை அலுவலகத்தில் பணிபுரிபவரும் இல்லை.
சம்பந்தமே இல்லாமல், தன் வேலையைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்த ஒரு அப்பாவி மீது தன் கோபத்தைக் காட்டியுள்ளார் நூர்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        