வன்முறையைக் கையில் எடுக்கும் புலம்பெயர்வோர்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள காட்சிகள்
Migrants on a French beach attacked cops as they tried to set sail for Britain: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர் பிரான்ஸ் நாட்டு பொலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர், பிரான்ஸ் நாட்டு பொலிசாரை தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதிர்ச்சிக் காட்சிகள்
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டு கடற்கரை ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

ஆம், கடத்தல்காரர்கள் வன்முறையை பயன்படுத்தி, புலம்பெயர்வோரை கட்டாயப்படுத்தி சிறுபடகுகளில் ஏற்றி அனுப்புவது குறித்த செய்திகளை கேள்விப்பட்டுள்ளோம்.
ஆனால், முதன்முறையாக, புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டு பொலிசார், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுக்க போதுமான முயற்சிகள் மேற்கொள்வதில்லை என பலமுறை பிரித்தானிய தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த காட்சிகளைப் பார்க்கும்போது, அந்தக் குற்றச்சாட்டு முழுமையாக உண்மையானது அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சிகளில், புலம்பெயர்வோர் சிலர் ரப்பர் படகொன்றை தூக்கிக்கொண்டு கடலுக்குள் இறங்க முயல்வதையும், பொலிசார் அவர்களைத் தடுக்க முயல, புலம்பெயர்வோரில் சிலர் பொலிசாரை தாக்குவதையும் காணலாம்.
அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே போன்ற ஒரு ஸ்பிரேயை தெளிக்கும் பொலிசார், அவர்களுடைய ரப்பர் படகுகளை கத்தியால் கீறுவதையும் அந்த வீடியோவில் பார்க்கமுடிகிறது.
ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கும் ஆகத்து மாதம் 2ஆம் திகதிக்கும் இடையில் இதுபோல 185 சிறுபடகுகளை தடுத்து நிறுத்தியதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதாவது, மூன்று மாதங்களில், சுமார் 4,300 சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |