ஜேர்மன் தலைநகரில் ஆட்சியமைக்கும் முயற்சியில் புலம்பெயர்ந்தோரின் மகள்
Berlin's Left Party, the Greens and the Social Democrats are set to move ahead on talks to form the next coalition government in the capital city: பெர்லின் நகரில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இடதுசாரிகள் கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள்
ஜேர்மன் தலைநகரான பெர்லின், ஒரு நகரம் மட்டுமல்ல, அது ஒரு மாகாணமும் ஆகும்.
பெர்லின் நகரின் மேயராக தற்போது Christian Democratic Union of Germany (CDU) கட்சியைச் சேர்ந்த, Kai Wegner என்பவர் பொறுப்பு வகித்துவருகிறார்.

ஆனால், சமீபத்தில் பெர்லினில் நடைபெற்ற தேர்தலில், ஆளும் CDU கட்சியை பின்னுக்குத் தள்ளி, Die Linke (The Left) என்னும் தீவிர இடதுசாரிக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், Die Linke கட்சியின் தலைவரான எலிஃப் எரால்ப் என்பவர், Greens மற்றும் Social Democrats (SPD) கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து, பெர்லினில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கூட்டணி முடிவாகும் நிலையில், எலிஃப் எரால்ப், பெர்லின் நகர மேயராகும் வாய்ப்பு உள்ளது.

அப்படி அவர் பெர்லின் நகர மேயராகும் பட்சத்தில், பெர்லின் நகரின் முதல் பெண் மேயர் என்னும் பெருமை அவருக்குக் கிடைக்க உள்ளது.
சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சமீபத்தில் பேச்சுவார்த்தைகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன.
ஆட்சியமைக்கும் புலம்பெயர்ந்தோரின் மகள்
ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், எலிஃப் எரால்ப், துருக்கி நாட்டிலிருந்து அகதிகளாக வந்த ஒரு தம்பதியரின் மகள் ஆவார்.
1980ஆம் ஆண்டு, துருக்கியில் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து எலிஃப் எரால்பின் பெற்றோர் துருக்கியிலிருந்து தப்பியோடி ஜேர்மனியில் புகலிடம் கோரினார்கள்.

1981ஆம் ஆண்டு மியூனிக் நகரில் எலிஃப் எரால்ப் பிறந்தார். இளம் வயதிலேயே அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் எலிஃப்.
2010ஆம் ஆண்டு பெர்லினுக்கு குடிபெயர்ந்த எலிஃப், 2021ஆம் ஆண்டு வரை, Die Linke கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் சட்ட கொள்கை ஆலோசகர் முதல் பல்வேறு பணிகள் செய்துவந்தார்.
2017ஆம் ஆண்டு கட்சியில் இணைந்த எலிஃப், பல்வேறு பொறுப்புகள் வகித்துவந்த நிலையில், இந்த ஆண்டு கட்சியின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தேர்தலில் வெற்றி பெற்று, இன்று பெர்லினின் மேயராவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ள எலிஃப், அதற்காக கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறார்.