புலம்பெயர்வோருக்கு வாழ்நாள் தடை... பிரித்தானியாவை பின்பற்றி கடும் நடவடிக்கை: ஜேர்மனி முடிவு
சிறுபடகுகள், புலம்பெயர்வோர் விவகாரத்தை பிரித்தானியா கையாள்வதை அப்படியே தங்கள் பாணியில் பின்பற்ற ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
புதிய பிரேரணை - ரிஷி சுனக் அரசாங்கம்
சிறுபடகுகளில் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் மக்களை உடனடியாக கைது செய்து, சொந்த நாட்டுக்கு அல்லது மூன்றாவது ஒரு நாட்டுக்கு அனுப்பி வைக்கும் புதிய பிரேரணையை ரிஷி சுனக் அரசாங்கம் அமுலுக்கு கொண்டுவர உள்ளது.
Credit: Karsten Mosebach
இதனால் மக்கள் அச்சம் காரணமாக பிரித்தானியாவுக்குள் நுழைவது குறையும், மட்டுமின்றி, பிரான்ஸ் அரசாங்கமும் இந்த விவகாரத்தில் பிரித்தானியாவுக்கு உதவி செய்யும். இதற்கென பிரான்ஸ் அரசாங்கத்திற்கு ரிஷி சுனக் நிர்வாகம் அரை பில்லியன் பவுண்டுகள் தொகையை அளிக்கும்.
இந்த நிலையில், திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொடர்புடைய பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது. சிறுபடகுகளின் வருகையை தடுக்கும் இந்த பிரேரணைக்கு தொழில் கட்சி ஆதரவளிக்காது என்றே கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இந்த வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பார்கள்.
ஆனால், ஜேர்மர் மூத்த அரசியவாதி Joachim Stamp தெரிவிக்கையில், பிரித்தானியா அமுலுக்கு கொண்டுவர இருக்கும் இந்த திட்டத்தை ஜேர்மனியில் சாத்தியப்படுத்துவது தொடர்பில் விவாதிக்கப்படும் என்றார்.
வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாடுகடத்துவதே தீர்வு
புலம்பெயர் மக்களின் நெருக்கடியை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர் மக்களை வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாடுகடத்துவதே தீர்வாக கருதுகின்றன.
@PA
இந்த நிலையில், ஜேர்மனி அரசாங்கமும் புலம்பெயர்வோரை தடுக்க தங்களின் அதே திட்டத்தை பயன்படுத்த இருப்பதை பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் வரவேற்றுள்ளது.
மேலும், ஐரோப்பா முழுவதும் இதே புலம்பெயர்வோர் நெருக்கடியுடன் போராடி வருகிறது. வரும் எண்ணிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. சட்டவிரோத புலம்பெயர் மக்களை ருவாண்டா போன்ற பாதுகாப்பான நாடுகளுக்கு அனுப்பி வைப்பது தான் தீர்வாக இருக்கும் எனவும் உள்விவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் சிறுபடகுகளில் 45,000 சட்டவிரோத புலம்பெயர் மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர். இந்த ஆண்டு குறித்த எண்ணிக்கையானது 80,000 தொடலாம் என்றே அஞ்சப்படுகிறது.
@PA
திங்கட்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படும் இந்த பிரேரணையானது சிறுபடகுகளில் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் வாழ்நாள் தடை பெறுவதுடன், அவர்களால் இனி புகலிடம் கோரவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.