புலம்பெயர்த்தோர் குடியிருப்புக்கு பிரித்தானியா ரூ 1153 கோடி செலவிட நேரும்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரித்தானியாவில் சிறு படகுகள் ஊடாக புலம்பெயரும் மக்களுக்கான குடியிருப்புகளுக்கு செலவிடும் தொகை நான்கு மடங்காக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
290 மில்லியன் பவுண்டுகள்
சிறு படகுகள் ஊடாக பிரித்தானியாவுக்கு புலம்பெயரும் மக்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்ப பிரதமர் ரிஷி சுனக் தீவிரமாக முயன்று வருகிறார். இதன்பொருட்டு அந்த நாட்டிற்கு இதுவரை 290 மில்லியன் பவுண்டுகள் தொகையை செலுத்தியும் உள்ளனர்.
@pa
ஆனால் ருவாண்டா திட்டம் சட்ட சிக்கலால் செயல்படுத்த முடியாமல் உள்ளது. இந்த நிலையிலேயே பிரதமர் அலுவலகம் ருவாண்டா திட்டம் குறித்த அரசாங்கத்தின் சட்ட ஆலோசனையை நேற்று வெளியிட்டது.
சட்டவிரோத குடியேற்றம்
அதில், தற்போது நாளுக்கு 8 மில்லியன் பவுண்டுகள் செலவிடும் நிலையில், 2026ல் இது நாளுக்கு 32 மில்லியன் பவுண்டுகள் என அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
@reuters
இது ஆண்டுக்கு 11 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். அதாவது இந்திய பண மதிப்பில் ரூ 1153 கோடி என்றே கூறப்படுகிறது.
எனவே, சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க அரசாங்கம் தனது வசம் உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |