லண்டன் இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்: திடுக் பின்னணி
பிரித்தானிய இளம்பெண் ஒருவரைக் கொலை செய்த புலம்பெயர்ந்தோர் ஒருவர் நாடுகடத்தப்பட உள்ளார்.
கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்
லண்டனில் வாழ்ந்து வந்த இளம் ஆசிரியையான சபீனா (Sabina Nessa, 28), ஒரு நாள் இரவு தன் நண்பர் ஒருவரைக் காண்பதற்காக சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, திடீரென Koci Selamaj என்னும் ஒரு அல்பேனிய நாட்டவர் ஓடி வந்து சபீனாவைத் தாக்கியிருக்கிறார். உலோகப் பொருள் ஒன்றைக் கொண்டு அவர் சபீனாவின் தலையில் 34 முறை தாக்கும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.
Credit: PA
பின் சபீனாவை பூங்கா ஒன்றிற்குத் தூக்கிச் சென்ற Koci, அவரது உடைகளைக் களைந்து, உள்ளாடைகளை அகற்றியிருக்கிறார். பின்னர் அவரைக் கழூத்தை நெறித்துக் கொன்று போட்டுவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார் Koci.
24 மணி நேரத்துக்குப் பின்னரே சபீனாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
Credit: PA
திடுக் பின்னணி
காரணமே இல்லாமல், சம்பந்தமே இல்லாத ஒரு இளம்பெண்ணை Koci கொடூரமாக தாக்கிக் கொலை செய்தது ஏன் என அவரது குடும்பத்தினர் குழப்பத்தில் இருக்க, சில திடுக்கிடவைக்கும் தகவல்கள் பின்னர் வெளியாகின.
மனைவியை பயங்கரமாக தாக்கும் குணம் கொண்ட Kociயிடமிருந்து பிரிந்து சென்றிருக்கிறார் அவரது மனைவி. சபீனா கொல்லப்பட்ட அன்று தன் மனைவியை சந்தித்து தன்னுடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார் Koci.
Credit: Metropolitan Police
அவர் மறுக்கவே, காரை எடுத்துக்கொண்டு புறப்பட்ட Koci, சம்பந்தமே இல்லாத ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தி, அவரது உடைகளை அகற்றி அவமானப்படுத்திக் கொலை செய்திருக்கிறார். Kociக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமரும் அல்பேனிய பிரதமரும் சமீபத்தில் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ், பிரித்தானிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அல்பேனிய நாட்டவர்களான கொலைகாரர்கள் 11 பேர் நாடுகடத்தப்பட உள்ளார்கள். அவர்களில் Kociயும் ஒருவர்.
Credit: The Sun