தேர்தலில் வெற்றி பெறும் நிலையில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி: குழப்பத்தில் புலம்பெயர்ந்தோர்
September 6 German state election raises questions among migrants: ஜேர்மன் மாகாணமொன்றில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ள தேர்தல் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்காலம் குறித்த குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
குழப்பத்தில் புலம்பெயர்ந்தோர்
AfD கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி என்பது அனைவரும் அறிந்த விடயம். அக்கட்சியின் கொள்கைகளில் முக்கியமானவை ஜேர்மனிக்கு மற்ற நாட்டவர்கள் புலம்பெயர்தலைக் குறைப்பது, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவது முதலானவையாகும்.

ஆக, அக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், தங்கள் நிலைமை என்ன என்பது குறித்து அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோர் இப்போதே தீவிரமாக யோசிக்கத் துவங்கிவிட்டார்கள்.
ஏற்கனவே கருப்பினத்தவர் முதலானோர் இனவெறுப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், அதற்குப் பிறகு நாங்கள் எப்படி பாதுகாப்பாக உணரமுடியும், எப்படி சமுதாயத்தின் ஒரு சாதாரண பாகமாக நாங்கள் அங்கீகரிக்கப்படுவோம் என்கிறார்கள் கருப்பினத்தவர்கள் சிலர்.
AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்த நாட்டில் தாங்கள் தொடர்ந்து வாழமுடியுமா என கேள்வி எழுப்புகிறார்கள் கருப்பின இளைய தலைமுறையினர்.
புலம்பெயர்தல் பின்னணி கொண்ட பலர், தாங்கள் என செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
சிரியா நாட்டவரான Batoul Nayouf என்பவர், நிலைமையை ஒரே வாக்கியத்தில் தெளிவாக உணர்த்திவிட்டார். ஆம், நாங்கள் சூட்கேஸ்களை தயாராக வைத்துக்கொண்டு, அவற்றின் மீதுதான் உட்கார்ந்திருக்கிறோம் என்கிறார் அவர்.
வாக்களிப்போம், AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், அதன்பின் Saxony-Anhalt மாகாணத்தில் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம், எப்படியும் நாம் அக்கட்சி வெற்றி பெறுவதைத் தடுக்க முயற்சிக்கவேண்டும் என்கிறார் ஒருங்கிணைப்பு ஆலோசகரும் உள்ளூர் அரசியல்வாதியும், கருப்பினத்தவருமான Amidou Traore என்பவர்.
ஆக மொத்தத்தில், செப்டம்பர் 6ஆம் திகதி Saxony-Anhalt மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தல், அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்காலம் குறித்த குழப்பத்தை உருவாக்கியுள்ளதில் சந்தேகம் இல்லை எனலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |