பிரான்சில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற புலம்பெயர்ந்தோருக்கு நேர்ந்த பரிதாபம்
நேற்று, வட பிரான்சில் கலாயிஸ் பகுதிக்கு அருகில் ரயில் தண்டவாளம் ஒன்றின் வழியாக நடந்து சென்ற ஒரு கூட்டம் புலம்பெயர்ந்தோர் மீது வேகமாக வந்த ரயில் ஒன்று மோதியது.
ரயில் மோதியதில் அந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார், மூன்று பேர் காயமடைந்தார்கள்.
காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமான இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ரயில் சேவை இன்று காலை வரை ரத்து செய்யப்பட்டது.
அந்த புலம்பெயர்ந்தோர், எரித்ரியா நாட்டவர்கள் என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Accident à beau Marais avec un TER, il s agit de 4 Érythréens 1mort 1 en urgence absolu 2 blessés legers. Une pensée pour les victimes mais aussi pour le conducteur du train. @hautsdefrance
— Franck Dhersin (@FDhersin) November 4, 2021