நாடுகடத்தப்பட காத்திருந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர் உயிரிழப்பு : சுவிஸ் நகரம் ஒன்றில் துயர சம்பவம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், காவல் தடுப்பு மையம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நாடுகடத்தப்படுவதற்காக காத்திருந்த புலம்பெயர்ந்தோர்
ஜெனீவாவிலுள்ள Favra புலம்பெயர்தல் காவல் தடுப்பு மையத்தில், நாடுகடத்தப்படுவதற்காக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த வார இறுதியில், புலம்பெயர்ந்தோர் ஒருவர் அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு
உயிரிழந்த புலம்பெயர்ந்தோர் யார், எந்த நாட்டவர், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், சமீப காலமாகவே ஜெனீவாவிலுள்ள சிறைகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது தங்களை கவலை அடையச் செய்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது ஜெனீவாவிலுள்ள Favra புலம்பெயர்தல் காவல் தடுப்பு மையத்தில் புலம்பெயர்ந்தோர் ஒருவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, அந்த மையத்தை உடனடியாக மூடவேண்டும் என மூன்று மனித உரிமை ஆதரவுக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.