ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை கடும் சரிவு
2025ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையும், நிகர புலம்பெயர்தலும் கணிசமான அளவில் குறைந்துள்ளன.
புலம்பெயர்வோர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி
2025ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 1.48 மில்லியன் ஆகும்.
இந்த எண்ணிக்கை, 2024ஐ ஒப்பிடும்போது 13 சதவிகிதம் குறைவு. அதேபோல, ஜேர்மனியிலிருந்து வெளியேறிய புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 1.25 மில்லியன்.

ஆக, நிகர புலம்பெயர்தல் 235,000 ஆக குறைந்துள்ளது. இது 2024ஐ ஒப்பிடும்போது 45 சதவிகிதம் குறைவு ஆகும்.
சிரியா, ஆப்கானிஸ்தான், உக்ரைன் போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள் ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலர்கள்.
சிரியாவைப் பொருத்தவரை 2025இல் நிகர புலம்பெயர்தல் 67 சதவிகிதமும், ஆப்கானிஸ்தானைப் பொருத்தவரை 41 சதவிகிதமும், உக்ரைனைப் பொருத்தவரை 21 சதவிகிதமும் குறைந்துள்ளது.
அதேபோல, பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |