நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை! உண்மையை ஒப்புக்கொள்கிறோம் - CSK துடுப்பாட்ட பயிற்சியாளர்
நடப்பு சீசனில் நாங்கள் இன்னமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
CSK படுமோசமான ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்தது.
முதலில் துடுப்பாடிய சென்னை அணி டெஸ்ட் கிரிக்கெட் போல் ஓட்டங்கள் எடுத்தது. மேலும் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இது ரசிகர்களுக்கு அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியதால் பலரும் ஊடகங்கள், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மைக் ஹஸ்ஸி
இந்த நிலையில் CSK அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தோல்வி குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "நடப்பு சீசனில் நாங்கள் இன்னமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறோம். எனினும், ஒரு வெற்றி எங்களது மனநிலையை முற்றிலும் மாற்றிவிடும் என நம்புகிறேன். அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு விரைவில் வாய்ப்புகள் வழங்கப்படும். பிளே ஆப் சுற்றை எட்டிப் பிடிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதை செய்ய முடியும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |