இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய கோடீஸ்வரர், அவரது மகள்...
பிரித்தானியாவின் பில் கேட்ஸ் என அழைக்கப்படும் தொழிலதிபர் மைக் லிஞ்ச் (Mike Lynch) இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று காலை 12 பணியாளர்கள் உட்பட 22 பயணிகளை ஏற்றிச் சென்ற Bayesian எனும் சூப்பர் படகு, பலெர்மோவுக்கு அருகிலுள்ள போர்டிசெல்லோ துறைமுகத்தில் நங்கூரமிட்டபோது, கடுமையான புயல் தாக்கிய சில நிமிடங்களில் கடலுக்குள் மூழ்கியது.
56 மீட்டர் நீளமுள்ள (184 அடி) இந்த பேய்சியன் படகு கடலில் 50 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மூன்று நாட்களாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், இதுவரை 5 பேரின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர்.
இதில், Autonomy Corporation நிறுவனத்தின் நிறுவனரான மைக் லிஞ்சும் ஒருவர் என்பது உறுதியாகியுள்ளது.
மீட்கப்பட்ட மற்ற 4 சடலங்களில், லிஞ்சின் 18 வயது மகள் ஹன்னாவும் (Hannah) ஒருவர் என கூறப்படுகிறது.
இந்த படகில் பயணித்தவர்களில், மோர்கன் ஸ்டான்லி இன்டர்நேஷனல் தலைவர் Jonathan Bloomer மற்றும் அவரது மனைவி Judith Bloomer, கிளிஃபோர்ட் சான்ஸ் வழக்கறிஞர் Christopher Morvillo மற்றும் அவரது மனைவி Neda Morvillo அடங்குவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |