விமானத்தில் சம்பவம் செய்த பிரபல குத்துச்சண்டை வீரர்! வெளியான வீடியோ
பிரபல முன்னாள் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் விமானத்தில் தன்னுடன் பயணித்த சக பயணியை பயங்கரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் பயணித்த ஒருவரை பலமுறை குத்தினார்.
புதனன்று நடந்த இந்த சம்பவத்தில்,பாதிக்கப்பட்ட நபர் மைக் டைசனிடம் தொடர்ந்து பேச முயன்றுள்ளார். டைசனுக்கு பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த அந்த நபர், தொடர்ந்து அவரது காதுக்கு அருகே சென்று பேசி தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்துள்ளார்.
தொடக்கத்தில் அந்த நபருக்கு நட்பாகவும் பொறுமையாகவும் பதிலளித்து பேசிய டைசன், ஒரு கட்டத்தில் இருக்கும்படி சொல்லியேவிட்டார். அதற்கு பிறகும் அவரது நச்சரிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாமால் பொறுமையை இழந்தார் டைசன்.
விமானம் புளோரிடாவிற்கு புறப்படுவதற்கு முன்பு டைசன் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.
Imagine being dumb enough to provoke Mike Tyson in the close proximity of a plane during a 3 hour flight????♂️ pic.twitter.com/T3IBuB7lor
— ??Ziggy B?? (@therealziggyb23) April 21, 2022
நடந்த சம்பவம் குறித்து அமெரிக்க காவல்துறை, ஜெட் ப்ளூ விமான நிறுவனம் மற்றும் டைசனின் பிரதிநிதிகளிடமிருந்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
எல்லா காலத்திலும் சிறந்த ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர்களில் ஒருவராக கருதப்படும் டைசன், தனது ஒழுங்கற்ற நடத்தைக்காகவும் அறியப்படுகிறார்.