முன்னாள் காதலனை இழந்து நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டேன்! பிரபல தமிழ் திரைப்பட வில்லன் நடிகரின் 29 வயதான மனைவி உருக்கம்
பிரபல நடிகர் மிலண்ட் சோமனின் மனைவி அங்கிதா தன்னுடைய இளம் வயதில் வாழ்வில் கடந்து வந்த சோதனைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளவர் மிலண்ட் சோமன் (55). இவர் அங்கிதா கொன்வார் (29) என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
தம்பதி இடையே 26 வயது வித்தியாசம் இருப்பதால் அது குறித்து அடிக்கடி விமர்சனம் எழுவது வழக்கம். இந்த நிலையில் தன்னுடைய வாழ்வின் முன் பகுதி குறித்து அங்கிதா உருக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், சிறுமியாக இருக்கும் போது துன்புறுத்தப்பட்டேன், விடுதிகளில் வளர்ந்தேன், வெளிநாட்டு நகரங்களில் தனியாக வாழ்ந்தேன், மிகவும் நம்பிய நபர்களால் ஏமாற்றப்பட்டேன், முன்னாள் காதலனை இழந்தேன், என் தந்தையை இழந்தேன்.
நான் நம்பிக்கையுடன் திகழ்கிறேன் என நீங்கள் நினைத்தால், அது தான் நான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களை நீங்கள் நேசியுங்கள் என பதிவிட்டுள்ளார்.