ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம்: மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ள வெளியுறவுச் செயலர்
Deal with EU not dependent on tuition fees agreement, Miliband says: ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம், மாணவர்களின் கல்விக் கட்டணத்தைச் சார்ந்தது அல்ல என பிரித்தானிய வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவது தொடர்பில், பிரித்தானிய பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்.

இந்நிலையில், நேற்று பிரஸ்ஸல்ஸ் நகரில் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றிய தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவரான அன்றோனியோ கோஸ்டா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று தயாராகிவிட்டதாக ஆன்டி பர்னாம் தெரிவித்திருந்தார்.
பின்னணியில் ஒரு பிரச்சினை
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான 27 நாடுகளின் மாணவ மாணவியர் பிரித்தானியாவில் கல்வி கற்க வரும்போது, பிரித்தானிய மாணவ மாணவியருக்கு பிரித்தானியா எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறதோ, அதே கட்டணத்தைத்தான் ஐரோப்பிய ஒன்றிய மாணவ மாணவியருக்கும் வசூலிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தரப்பு நிபந்தனை வைத்துள்ளதாக, பிபிசி உட்பட பல பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனால், அப்படி பிரித்தானிய மாணவ மாணவியருக்கு பிரித்தானியா எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறதோ, அதே கட்டணத்தை மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய மாணவ மாணவியருக்கும் வசூலிக்குமானால், அதனால் பெரும் இழப்பு ஏற்படும் என பிரித்தானிய கல்வி நிறுவனங்கள் கவலை தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
வெளியுறவுச் செயலரின் கருத்து
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம், கல்விக்கட்டணத்தை சார்ந்தது அல்ல என்று கூறியுள்ளார் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான எட் மிலிபேண்ட்.

கல்விக்கட்டணம் குறித்து முடிவு எடுக்கப்படாவிட்டாலும், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைக்கு வரும் என்று மிலிபேண்ட் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பின்போது, ஐரோப்பிய ஒன்றிய தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் மூன்று ஒப்பந்தங்கள் உள்ளன என்று கூறியதாகவும், கல்விக் கட்டணப் பிரச்சினையைக் கையாளும் விடயம் ஒரு தனி விடயம் என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார் மிலிபேண்ட்.
அதாவது, ஒப்பந்தத்தில், உணவுப்பொருட்கள் ஏற்றுமதி, ஆற்றல் மற்றும் கல்வி, வேலை போன்ற விடயங்களுக்காக இரு தரப்புக்கும் இளைஞர்கள் பயணம் போன்ற விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், கல்விக்கட்டணம் குறித்து பிரித்தானியா முடிவு எடுத்தால் மட்டுமே ஒப்பந்தம் நிறைவேறும் என தகவல்கள் வெளியான நிலையில், கல்விக்கட்டணம் குறித்து முடிவு எடுக்கப்படாவிட்டாலும், ஒப்பந்தம் நிறைவேறும் என்று தற்போது மிலிபேண்ட் கூறியுள்ளார்.