லொட்டரி திட்டம் போதாது... ஜேர்மன் ராணுவத் தலைவர்
டென்மார்க் போன்ற சில நாடுகளில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதில் லொட்டரி முறை என்னும் ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது.
அதேபோன்றதொரு திட்டத்தை அறிமுகம் செய்ய ஜேர்மன் ஆளும் கட்சிகள் முடிவு செய்திருந்தன. ஆனால், ஆளும் கூட்டணிக்குள் கருத்துவேறுபாடு உருவாகியதைத் தொடர்ந்து லொட்டரி திட்டத்தை அறிமுகம் செய்யும் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
லொட்டரி முறை ஆள் சேர்ப்பு
இந்த லொட்டரி முறை என்பது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நாளில் நாட்டிலுள்ள இளைஞர்கள் அனைவரும் ராணுவ ஆள் சேர்ப்பு தேர்வு ஒன்றில் பங்கேற்கவேண்டும்.
மொழி, கணிதம் முதல் உடல் மற்றும் மருத்துவப் பரிசோதனை வரை பல வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுவோர் ஒரு ட்ரம்மிலிருந்து லொட்டரிச்சீட்டு ஒன்றை எடுக்கவேண்டும்.
Christoph Hardt/Geisler-Fotopres/picture alliance
குறைந்த எண் கொண்டவர்கள் கட்டாய ராணுவ சேவையில் பங்கேற்க வேண்டும், அதிக எண் கொண்டவர்களுக்கு கட்டாய சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஜேர்மன் ராணுவத் தலைவர் கருத்து
இந்நிலையில், ஜேர்மன் ராணுவத் தலைவரான ஜெனரல் Carsten Breuerம் லொட்டரி முறையை நிராகரித்துள்ளார்.
அனைத்து ஜேர்மன் இளைஞர்களும் ராணுவத்தில் சேருவது தொடர்பில் மதிப்பீடு செய்யப்படவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அப்போதுதான், நாட்டில் ராணுவத்தில் சேரும் தகுதியுடையவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், போர்ச்சூழலில் அவர்களில் யாரையெல்லாம் அழைக்கலாம் என்பது நமக்குத் தெரியவரும் என்கிறார் ஜெனரல் Carsten Breuer.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |