கனடாவில் இந்த உணவுப்பொருட்களின் விலை புத்தாண்டில் உயர இருப்பதாக தகவல்
வரும் புத்தாண்டில், கனடாவில் பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் மற்றும் யோகர்ட் ஆகியவற்றின் விலையும் உயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் புத்தாண்டில், கனடாவில் பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை உயர இருப்பதாக கனேடிய பால் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாலின் விலையை 2.2 சதவிகிதம் அல்லது லிற்றருக்கு இரண்டு சென்ட்கள் வரை உயர்த்த ஆணையம் அனுமதியளித்துள்ளதாக நேற்று கனேடிய பால் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு, 2023ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி அமுலுக்கு வர உள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் விலை உயர இருப்பதால், பிற பால் தயாரிப்புகளான வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் மற்றும் யோகர்ட் ஆகியவற்றின் விலையும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
THE CANADIAN PRESS/Sean Kilpatrick