தீபாவளி ஸ்பெஷல்.., சுவையான பால் கேக் எப்படி செய்வது?
Milk cake recipe- பொதுவாகவே, தீபாவளி என்றாலே வீட்டில் பலகாரம் செய்வது வழக்கம்.
அதன்படி, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவம் பிடித்த ஒரு தின்பண்டமாக இருப்பது பால் கேக்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பால் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- 1½ லிட்டர்
- சர்க்கரை- 200g
- எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- நட்ஸ்- தேவையான அளவு
செய்முறை
முதலில் வாணலில் பால் ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதி வந்த பிறகு இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து நன்கு கெட்டியான பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

நன்கு கலந்து பால்கோவாவின் பக்குவதற்கு வந்ததும் ஏலக்காய் தூள் மற்றும் அவ்வப்போது நெய் சேர்த்து கலக்கவும்.
பின் நன்கு பொன்னிறமாக வந்தவுடன் நட்ஸ் சேர்த்து அடுப்பில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
இறுதியாக இதை மூடிவிட்டு 8 மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிட்டு துண்டுகளாக வெட்டி எடுத்தால் சுவையான பால் கேக் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |