பால் குடிப்பது நல்லது தான்! ஆனால் அதில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா?
பால் அனைத்து விதத்திலும் ஆரோக்கியமாக இருந்தாலும் அதில பல பக்கவிளைவுகளும் உள்ளது.
பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துவது உண்மைதான் என்றாலும் அதிகளவு பால் குடிப்பது உங்கள் எலும்புகள் முறிவடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது.
பிரிட்டிஷ் கவுன்சிலில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகளவு பால் குடிப்பது எலும்பு முறிவு, இதய கோளாறுகள், வயதானவர்களிடையே புற்றுநோய் ஏற்படும் அபாயம் என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது ஆகவே இதயநோய் இருப்பவர்கள் அதிகம் பால் குடிக்க கூடாது.
downshiftology
பாலை ஒரேயடியாக குடிக்காமலும் இருக்கக்கூடாது. ஒரு சிலர் சுத்தமாக பாலை தொடவே மாட்டார்கள். அப்படி குடிக்காமல் இருந்தாலும் உடலில் லாக்டோஸ் பற்றாக்குறையும் ஏற்படும்.
பால் அதிகமாக குடிக்கும்போது நம் உடம்பில் இந்த பிரச்சனை உருவாகிறது. எனெனில், அளவுமிகுந்த லாக்டோஸை உடலானது கிரகிக்க முடியாது. அப்போது உடல் உறுப்புக்களில் வீக்கம், செரிமானப்பிரச்சனை, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். இதனால், வயிற்றில் வாயு பிரச்சனை அதிகமாவதோடு, உடம்பிலுள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கிறது.
purewow